சாந்தனுவின் மாறுபட்ட நடிப்பில் ‘இராவணகோட்டம்’... டிரெய்லரை வெளியிட்ட சிம்பு !

சாந்தனுவின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘இராவணகோட்டம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இளம் நடிகரான சாந்தனுவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராவணகோட்டம்’. இந்த படத்தை 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் பிரபலமான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கேஆர்ஜி குரூப்ஸ் ஆப் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. கிராமத்து மண்வாசனையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.