‘என் சந்தோஷ கண்ணீரே….’ – மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய ‘சிவகார்த்திகேயன்’.

photo

கோலிவுட்டின் முன்னணி நடிகர்கலுள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது மனைவியை கட்டியனைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

photo

விஜய்டிவியில் தொகுப்பாளராக தனது வாழ்கையை துவங்கிய சிவகார்த்திகேயன், தனது அசாத்திய திறமையால் கோலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். நடிப்பதை தாண்டி நடனம், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகதிறமை கொண்டவராக உள்ளார். மெரினா, 3, ஆகிய படங்களில்  நடித்த சிவகார்த்திகேயனின் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, காக்கிசட்டை என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து சிவாவின் டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடிக்குமேல் வசூல் செய்து வசூல் மன்னன் லிஸ்டில் சிவாவை இணைத்தன. அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து நடித்து வரும் சிவா இன்று தனது திருமண நாளை கொண்டாடுகிறார். அதற்காக மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தி வெளியிட்ட அவர் ‘ என் சந்தோஷ கண்ணீரே’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Share this story