சிவாங்கி குரலில் 'லவ் மேரேஜ்' படத்தின் 2 வது பாடல் ரிலீஸ்...!

vikram prabhu

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமான 'லவ் மேரேஜ்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.


விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள புதிய படம் 'லவ் மேரேஜ்'.
இதில், நாயகியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
 
கோபிச்செட்டிபாளையத்தை கதைக்களமாக கொண்ட இப்படம் 30 வயதிற்கு மேல் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் நாயகன் பற்றியும், திருமணத்தால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றியும் பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்தார். இந்த நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் புதிய பாடலான 'பேஜாரானேன்' இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு மோகன் ராஜன் வரிகளை எழுத, சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடியுள்ளார். 

Share this story