சிம்பு பாடல், மழை, ஷிவானி நாராயணன்-கவிதை.....கவிதை..... ; இணையத்தை கலக்கும் வீடியோ…..

photo

ஷிவானி நாராயணன் அசத்தல் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பகல் நிலவு சீரியலில் அசீமிற்கு ஜோடியாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்தாலும்,அவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்தது என்னவோ இன்ஸ்டாவில் அவர் போடும், அந்த கிளாமர் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு தான். தற்பொழுது 3.5M ஃபாலோவர்ஸ்களை இணையத்தில் வைத்துள்ள ஷிவானி.

photo

இவர் பிக்பாஸ்ஸில் கலந்து கொண்டு சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கம் காட்டி பல சர்ச்சைகளில் சிக்கினார்.பிக்பாஸிற்கு பிறகான ஷிவானி வாழ்க்கை வேறு என்றே சொல்லலாம், அதாவது இதுவரை சின்னதிரையில் மட்டும் நடித்து வந்த அவருக்கு வெள்ளிதிரை வாய்ப்பு வந்தது, தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக நடித்திருப்பார், அடுத்து வீட்ல விசேஷம் படத்தில் நடித்தார். நாய் சேகர் ரிட்டன்ஸ், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என வெளியாக உள்ளது.

shivani

இந்த நிலையில் கொட்டும் மழையில் நடிகர் சிம்புவின் ‘காதல் வராதா… காதல் வராதா…’ பாடலுக்கு எக்கு தப்பாக ஆட்டம் போட்டுள்ளார். கவர்ச்சிக்கு குறைவைக்காத ஷிவானியின் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஹார்ட் எமோஜிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

Share this story