மும்பையில் கமலை சந்தித்த சிவாண்ணா... என்னவா இருக்கும்?
1697257788430

சந்தேஷ் புரொடக்ஷன் தயாரிப்பில், எம் ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் ‘கோஸ்ட்’ . இந்த படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து அனுபம் கெர், ஜெயராம், பிரசாந்த் நாராயணன், சத்யபிரகாஷ், தத்தன்னா மற்றும் அர்சனா ஜோயிஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். மகேந்திர சிம்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். அனல் பறக்கும் அதிரடி ஆக்ஷனில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. டிரைலரை பார்த்த பலரும் கேஜிஎப் சாயலில் உள்ளதாக கூறினர்.‘கோஸ்ட்’ படம் வரும் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், கோஸ்ட் படத்தின் புரமோசன் பணிக்காக மும்பை சென்ற சிவராஜ்குமார், அங்கு கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.