சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!

shivaraj kumar

கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் தற்போது இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் 'பைரதி ரணகல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். . இப்படத்தில் ஸ்ரீ முரளி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கீதா பிக்சர்ஸ் சார்பில் கீதா சிவராஜ்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் 'பைரதி ரணகல்' படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 2 நிமிடம் மற்றும் 31 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர் பைரதி ரணகல் வேடத்தில் சிவராஜ்குமார் வழக்கறிஞராகவும், கேங்க்ஸ்டராகவும் நடித்துள்ளர். இந்தப் படம் ஒரு கற்பனை நகரத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர்வாசிகள் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்காக போராடுவதை இந்த டிரெய்லரில் காணலாம்.

 

Share this story