விஜயகாந்த் மறைவால் நாளை படப்பிடிப்புகள் ரத்து
கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் விஜயகாந்த். கலைஞர், எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர் விஜயகாந்த் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.