கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் தற்போது கோழிப்பண்ணை செல்லதுரை என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கி, தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Share this story