கார்த்தி நடிக்கும் 27-வது படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடக்கம்

கார்த்தி நடிக்கும் 27-வது படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடக்கம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்‘, ‘96’ ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் பிரேம்குமார். அதில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் வெளியான ‘96’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பலரது பள்ளி பருவ வாழ்க்கையை நினைவுப்படுத்தியது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சில ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்த பிரேம்குமார், தற்போது கார்த்தியின் 27வது படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

கார்த்தி நடிக்கும் 27-வது படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடக்கம்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 17-ம் தேதி கும்பகோணத்தில் தொடங்குகிறது. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

Share this story