மிஸ் மேகி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

மிஸ் மேகி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

யோகி பாபு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடிக்கும் மிஸ் மேகி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்து உள்ளார். அடுத்ததாக, லதா ஆர்.மணியரசு இயக்கத்தில் 'மிஸ் மேகி' என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தில் யோகி பாபு மிக முக்கிய கதாபாத்திரத்தில, பெண் வேடத்தில் நடித்துள்ளார். ஆத்மிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த மிஸ் மேகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு அடைந்துள்ளது. 


இறுதியாக மாதம்பட்டி ரங்கராஜ் அளித்த விருந்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இது தொடர்பான காணொலியை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

Share this story