ரஜினி-170 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்... புகைப்படங்கள் ரிலீஸ்...

ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ரஜினி நடிப்பில் உருவாகும் 170-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. 

ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

அதன்படி, படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.

ரஜினி நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில், ரஜினி, மஞ்சு வாரியார், இயக்குநர் ஞானவேல், தொகுப்பாளர் ரக்‌ஷன் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

Share this story