ஷாட் பூட் த்ரீ படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்
வெங்கட்பிரபு மற்றும் சினேகா நடிப்பில் உருவாகியிருக்கும் ஷாட் பூட் த்ரீ படத்தின் முன்னோட்டம் வெளியானது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கென தனி பாணியில் தொடர்ந்து என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடைசியாக தெலுங்கு மற்றும் தமிழில் கஸ்டடி திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து, தற்போது விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வெங்கட் பிரபு அடுத்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் ஷாட் பூட் த்ரீ. அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் நிபுணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
திரைப்படத்தில் சினேகா, யோகி பாபு மற்றும் குழந்தை நட்சத்திரங்களான பூவையார், கைலாஷ் ஹீட், பிரணித்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு ராஜேஷ் வைத்தியா இசை அமைத்திருக்கிறார்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கலகலப்பான குடும்ப திரைப்படமாக ஷாட் பூட் த்ரீ உருவாகியுள்ளது.