“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP

“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த கதைக்களத்திற்காக பாராட்டப்பது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிசிலும் வசூல் சாதனை செய்தது.
“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP
‘No Means No’ ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் அப்போது ட்ரெண்டிங்கில் இருந்தது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டினர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி
மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை அஜித்குமார் என்ற பிரபல நடிகர் கூறிய போது அது இன்னும் பல மக்களைச் சென்றடைந்தது.
“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP
நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ நாம் வெளிப்படையாக பேசக்கூட தயங்கும் ஒரு விஷயத்திற்காக முரண்பாடுகளை மீறி தமிழ் சினிமாவின் பெரிய ஸ்டார் நடிகர் தனி ஒரு ஆளாக முன்னின்று ஒரு திரைப்படத்தில் நடித்தார், ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமையாக உணர்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“முரண்பாடுகளை உடைத்தெறிந்தவர்… ‘தல’யுடன் நடித்ததில் மிகப்பெருமை”-ஷ்ரத்தா ஸ்ரீநாத்! #1YearofNKP

Share this story