ஷ்ரத்தாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ‘கலியுகம்‘.. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள டிரெய்லர் வெளியீடு

Kaliyugam

 நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் இணைந்து நடித்துள்ள ‘கலியுகம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

'விக்ரம் வேதா', 'நேர்கொண்டபார்வை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கலியுகம்’. இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார். பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா மற்றும் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. 

இந்தப் படத்தை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.  கே.ராம்சரண்  ஒளிப்பதிவு  செய்திருக்கும்  இந்த  திரைப்படத்திற்கு  டான் வின்சென்ட்  இசையமைத்துள்ளார். போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த படம் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருகிறது. 

இந்நிலையில் தயாரிப்பு பணியில் உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அனிரூத் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். மூன்றாம் உலக போருக்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story