‘ஸ்ரேயா’வின் அந்த இடத்தை வர்ணித்த நெட்டிசன் – தக் லைஃப் கொடுத்த கணவர்.

photo

நடிகை ஸ்ரேயா சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், நெட்டிசன் ஒருவன் அவரின் முன்னழகை வர்ணிக்க அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரேயாவின் கணவர்.

photo

கோலிவுட்டில்   கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரேயா, தொடர்ந்து ரஜினிகாந்த, விக்ரம், ஜெயம்ரவி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடிபோட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஸ்ரேயா வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்ற அழகிய  பெண் குழந்தை உள்ளார். 

photo

திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடிப்பதை கைவிடாமல் நடித்துவருகிறார் ஸ்ரேயா.  இவர் நடிப்பதை கடந்து சமூகவலைதளத்தில் ஆக்டிவாகவும் இருந்து போட்டோஷூட் புகைப்படங்கள், தனது மகளுடன் நேரம் செலவிடும் வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் படு கவர்ச்சியான  புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த ஸ்ரேயாவை பார்த்து நெட்டிசன் ஒருவர் உங்கள் மார்பகம் அழகாக இருக்கிறது என வர்ணிக்க, ஸ்ரேயா பக்கத்தில் இருந்த கணவர் தக் லைஃப் கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.


அதாவது “ I agree with you guys” என மிக கூலாக பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Share this story