அந்த இடத்தில் இந்த டாட்டூவா!.... என்ன ஸ்ருதி இதெல்லாம்….– சர்சையில் சிக்கிய கமலின் மகள்.

photo

ஆன்மீக ஆர்வம் அதிகரித்த ஸ்ருதிஹாசன் முருகனின் வேல் உருவத்தை தனது பெயருடன் இணைத்து பச்சை குத்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிந்துள்ளார். இது தற்போது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.

photo

ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமை கொண்டவராக இருந்து வருகிறார். அதேப்போல ஸ்ருதிக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் என்பது, அவர் பேட்டிகளில் கூறும் தகவல்கள் மூலமாக பலருக்கும் தெரியும்.  இந்த நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக தனது உடலில் ஏற்கனவே குத்தியிருந்த ‘ஷ்ருதி’ எனற பெயருடன் முருகபெருமானின் வேல் உருவத்தை இணைத்துள்ளார்.

photo

மேலும் இது குறித்து அவர் கூறிய போதுநான் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர், முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு, இந்த டாட்டு மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன்என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் பச்சை குத்துவது என்பது என்னுடைய வழக்கமான ஒன்றாகும், தற்போது ஆன்மீகத்தின் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று விரும்பினேன், வேறு எதுவும் குறிப்பிட்ட நிகழ்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்மீகம் என்பது என்னை அடக்கமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this story