மதுப்பழக்கத்திற்கு அடிமையானது குறித்து மனம் திறந்து பேசிய ஸ்ருதிஹாசன்
கமல் ஹாசனை போலவே பன்முக திறமை கொண்டவராக சினிமாதுறையில் வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் சினிமா உலகிற்கு ‘தேவர் மகன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கமல் ஹாசன் நடித்த ‘உன்னைபோல் ஒருவன்’ படத்தில் பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்றார், அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் தமிழை கடந்து, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து அசத்தினார்.அந்த வகையில் கடந்த பொங்களுக்கு தெலுங்கில் நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த வாடல்ட்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ்ஸிற்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடித்து வருகிரார்.
இந்நிலையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி ஹாசன், தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். என் வாழ்நாளில் 8 ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாகி இருந்தேன். அந்த நாட்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கும் மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் இணைந்து குடிப்பதை விரும்புவேன். ஆனால், போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை என தெரிவித்துள்ளார்.