கூலி படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து பகிர்ந்த ஸ்ருதிஹாசன்
1735208716000
ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் நடிப்பது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும் போது, “கிறிஸ்துமஸ் தினத்திலும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறேன். கடந்த வருடம் தெலுங்கு ‘கிராக்’ படப்பிடிப்பில் இருந்தேன்.
பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளின் போது படப்பிடிப்பில் இருப்பது நன்றாகவும் உற்சாகமாகவும் இருக்கும். லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும்.அது, கூலி படத்தில் நிறைவேறி இருக்கிறது. இதில் ரஜினியுடன் நடிப்பது, எனக்கு சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.