அடுத்தடுத்து 2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்...!
2 படங்களில் இருந்து விலகிய ஸ்ருதி ஹாசன்நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர், ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் ஒப்பந்தமாகி இருந்த 2 படங்களில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெக்காயிட்: எ லவ் ஸ்டோரி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதன் டீஸரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், கதாபாத்திரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்தப் படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார். அதே போல, ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஆங்கிலப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகியதை அடுத்து, ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். இந்நிலையில் இந்தப் படத்திலிருந்தும் அவர் விலகியுள்ளார்.