“கூலி படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” - ஸ்ருதிஹாசன்

Srut

“கூலி படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” - நடிகை ஸ்ருதிஹாசன்கூலி படத்தில் சத்யராஜ் சார் மகளாக நடித்துள்ளேன். இப்படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

கூலி'' - ''என்னுடைய கதாபாத்திரம் அதுதான்'' - ஸ்ருதிஹாசன்|Everyone will  relate to my role - Shruti Haasan

சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஸ்ருதிஹாசன், “கூலி படத்தில் சத்யராஜ் சார் மகளாக நடித்துள்ளேன். இப்படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன். படம் நெடுகிலும் வரும் கதாப்பாத்திரம். இப்படத்தில் நடிக்கும் வரை ரஜினி சாருடன் நெருங்கி பழகியதில்லை. இப்போது அது நடந்தது மகிழ்ச்சி. நான் ‘இனிமேல்’ மியூசிக் வீடியோவில் நடித்தபோது லோகேஷ் கனகராஜ் கூலி ஸ்கிரிப்டை என்னிடம் கூறினார். ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமாவில் என் குரலுக்காக என்னை பலர் கிண்டல் செய்துள்ளனர். இந்தி ரசிர்களுக்கு என்னுடைய Deeper voice பிடித்தது. ஏனெனில் ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் ஆகியோரின் தனித்துவமான குரல்கள் அவர்களுக்கு முன்பே பரிச்சயமாகி இருந்தது” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது. கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Share this story