ஸ்ருதிஹாசன் நடித்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

sruti

ஸ்ருதிஹாசன் நடித்த ஹாலிவுட் படமான 'தி ஐ' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்திலும் நடித்து வருகிறார். sruti

இப்படங்களைத் தவிர்த்து டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மார்க் ரௌலி கதாநாயகனாக நடிக்க, மேலும் லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this story