சிபி சத்யராஜ் நடித்த `டென் ஹவர்ஸ்' படத்தின் 2வது டிரெய்லர் நாளை ரிலீஸ்...!

cibi

நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள  `டென் ஹவர்ஸ்' படத்தின் 2வது டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.



திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலையில் காரணமாக வெளியிடவில்லை. இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் டிரெய்லரை படக்குழு நாளை மாலை மணிக்கும் வெளியிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

Share this story

News Hub