சிபி சத்யராஜ் நடித்த ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

cibi sathyaraj

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகும் டென் ஹவர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் மகன் தான் சிபி சத்யராஜ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் சத்யராஜ் உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் மாயோன் போன்ற பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது டென் ஹவர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை இளையராஜா கலியபெருமாள் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிபி சத்யராஜுடன் இணைந்து கஜராஜ், திலீபன், ஜீவா ரவி, சரவணன் சுப்பையா, ராஜ் ஐயப்பா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தை டுவின் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஃபைவ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இந்த படமானது 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே தற்போது இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 


இந்த படத்தில் சிபி சத்யராஜ் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் கொலை நடந்திருக்கிறது. அந்த கொலையை செய்தது யார்? எதற்காக அந்த கொலை செய்யப்பட்டது? என்பதை கண்டறியும் கதைதான் டென் ஹவர்ஸ். இந்த படத்தின் கதை முழுவதும் ஒரே நாள் இரவில் நடப்பது போன்று இந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

Share this story