சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

sibi sathyaraj
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது . சிபிராஜ் சில படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது புதிய படமொன்றில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மேலும், ‘விடாமுயற்சி’ வெளியாகாத காரணத்தினால், இப்படம் பொங்கல் வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இப்படத்துக்கு ‘டென் ஹவர்ஸ்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதில் சிபிராஜுடன் பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்கள் யாரையும் அறிவிக்கவில்லை படக்குழு.


 

Share this story