சித்தா படம் ஓடிடி தளத்தில் வெளியானது

சித்தா படம் ஓடிடி தளத்தில் வெளியானது 

திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளை பெற்ற சித்தா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் ‘சித்தா’ இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்கலை இயக்கிய சு. அருண்குமார் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான இந்த படம் நான்கு நாட்களில்  உலக அளவில் ரூ.11.5 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

சித்தா படம் ஓடிடி தளத்தில் வெளியானது 

இந்நிலையில், இன்று சித்தா திரைப்படம் பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர். 

Share this story