சித்தார்த் - மாதவன்- நயன்தாரா நடித்த TEST பட டீசர் வெளியீடு

சித்தார்த் - மாதவன்- நயன்தாரா நடித்த TEST பட டீசர் வெளியாகியுள்ளது.
'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரிக்கும் படம் 'TEST. இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sports. Drama. And a hat-trick of a cast. This pitch is all set for this test of life 🏏💥
— Netflix India South (@Netflix_INSouth) February 3, 2025
TEST, a sports drama starring @actormaddy, @nayanthara, and #Siddharth is coming soon, only on Netflix.#TEST#TESTOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/X0oiGyny7r
டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாகவுள்ளது. இத்திரைப்படம் விரைவில் நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டீசரின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.