சித்தார்த்- நயன்தாரா- மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

சித்தார்த்- நயன்தாரா- மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குவாட்டர் கட்டிங்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த, தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Namma vaazhkaila thiruppu munaiya oru tharunam varum. Adhuku per dhan TEST. Watch TEST on 4 April in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, only on Netflix!#TESTOnNetflix pic.twitter.com/V5o5bafBDj
— Netflix India (@NetflixIndia) March 6, 2025
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் இப்படம் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.