வெறித்தனம்.. சித்தார்த்தின் பட ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடும் உலகநாயகன் !

Siddharth

 நடிகர் சித்தார்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். தென்னிந்தியாவில் இவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சித்தார்த் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்', சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார்.

Siddharth

இந்த படத்தை எண்டகி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ‌‌‌‌‌‌மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த விரைவில் வெளியாக உள்ளது. 

Siddharth

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்த போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story