யதார்த்த வாழ்வியலை பேசும் 'சித்தா'... சித்தார்த்தின் பட போஸ்டரை வெளியிட்ட கமல் !

Siddharth

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்து வருபவர் சித்தார்த். அவரின் நடிப்பில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை சித்தார்த்தின் சொந்த நிறுவனமான ஸஎண்டகி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ‌‌‌‌‌‌மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

 chithha

இந்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்', சேதுபதி, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ளார். 'சித்தா' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் யதார்த்தமாக வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது. சித்தா என்றால் சித்தப்பா என்று பொருள். சித்தப்பா, மகள் ஆகிய இருவருக்கிடையே உள்ள பாச பிணைப்பை கூறும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

Share this story