சித்தார்த் நடித்த `மிஸ் யூ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
1731058827000
கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த் சித்தார்த் ‘சித்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை புதிய பரிமாணத்தில் சித்தா படம் காட்டியிருந்ததால் பெரிய அளவில் கவனம் பெற்றது.
இதையடுத்து 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’ N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸாகி கவனம் பெற்றன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 ஆம் தேதி ‘மிஸ் யூ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.