சித்தார்த் நடிப்பில் உருவான ‘மிஸ் யூ’ பட டிரைலர் ரிலீஸ் !
சித்தார்த் நடிப்பில் உருவாகும் மிஸ் யூ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் சித்தார்த் தற்போது, எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராஜசேகர் இயக்க ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கே ஜி வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க தினேஷ் பொன்ராஜ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தர்க்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். மேலும் கருணாகரன், பால சரவணன், மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ட்ரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
இந்த ட்ரெய்லரில் காதலும் காதலில் ஏற்படும் பிரச்சனைகளும் காட்டப்படுகின்றன. அடுத்தது சண்டை காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. மேலும் நடிகர் சித்தார்த்தை மீண்டும் சாக்லேட் பாயாக பார்க்க முடிந்துள்ளது. சித்தா படத்தை தொடர்ந்து வெளியான இந்தியன் 2 படம் சித்தாரத்திற்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆதலால் மிஸ் யூ திரைப்படம் சித்தார்த்தத்திற்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது