சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'சித்தா' படத்தின் டீசர் வெளியானது
1694006037917

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் திரைப்படம் 'சித்தா'. பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும், படத்திற்கான பாடல்களை திபு நிணன் தாமஸும் அமைத்துள்ளனர். அண்மையில் இப்படத்திலிருந்து வெளியான 'கண்கள் ஏதோ' என்ற முதல் பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியானது. நடிகர் கார்த்தி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சித்தப்பா மகள் உறவை பேசும் சித்தா திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.