சித்தார்த் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘டக்கர்’.. ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

Takkar

சித்தார்த் - யோகிபாபு கூட்டணியில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். டீன்ஏஜ் இளைஞனாக நடித்துள்ள சித்தார்த் இந்த படத்தில் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

Takkar

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Takkar

இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு காமெடியில் உருவாகியுள்ள இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளளது. 

Share this story