காதல், ரொமான்ஸில் உருவாகியுள்ள ‘டக்கர்’... சித்தார்த் படத்தின் டீசர் மற்றம் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் படத்தின் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. முதலில் ‘இந்தியன் 2’ போஸ்டரை லைக்கா வெளியிட்டுள்ளார். அதன்பிறகு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘சித்தா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தற்போது ‘டக்கர்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி 'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் சித்தார்த் நடித்தள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இப்படம் வரும் மே 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Takkar teaser is here ??
— KARTHIK DP (@dp_karthik) April 17, 2023
Maja Teaser ????
??: https://t.co/wyvvqQgZcU pic.twitter.com/xFrvyLgd1c