ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகும் சித்தார்த்தின் 'டக்கர்'... முக்கிய அறிப்பை வெளியிட்ட படக்குழு !

takkar

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‌ 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருபவர் சித்தார்த். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. 'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். 

ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகும் சித்தார்த்தின் 'டக்கர்'... முக்கிய அறிப்பை வெளியிட்ட படக்குழு !

இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ‌ 

Share this story