சித்தார்த்தின் மாறுப்பட்ட நடிப்பில் ‘டக்கர்’.. டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

Takkar

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் சித்தார்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் சித்தார்த் நடித்தள்ளார். 

Takkar

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகிறது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story