‘அயலான்’ பட ஏலியனுக்கு குரல் கொடுத்த சித்தார்த்.

photo

அயலான் படத்தில் வரும் குட்டி ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார் என படக்குழு அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள படம் ‘அயலான்’. இந்த படத்தை நேற்று, இன்று, நாளை படத்தின் இயக்குநரான ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இஷா கோபிகர், பால சரவணன் என் பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையத்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.


இந்த நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுடன் வரும் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். அதில்நடிகர் சித்தார்த் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி. நீங்கள் அளித்த ஒவ்வொரு உற்சாகமும், அர்ப்பணிப்பும் மற்றும் கடின உழைப்பும் எங்கள் அயலாளனை மிகவும் யதார்த்தமாகவும் அழகாகவும் மாற்றியுள்ளது. நாங்கள் செய்ததைப் போலவே பார்வையாளர்களும் உங்கள் வேலையை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்." என பதிவிட்டுள்ளனர்.

 

Share this story