கர்நாடகாவில் சித்தார்த் அவமதிப்பு; மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார்

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள ‘சித்தா’ படம் நேற்று வெளியானது. இந்த படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது. அதற்காக பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக் கொண்டிருக்கையில் காவிரி பிரச்சைனையை முன்னிறுத்தி கன்னட ஆதரவாளர்கள் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தினர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தின் பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடப்பதை அறிந்த கன்னட ஆதரவாளர்கள் படத்திற்கும், சித்தார்த்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நிகழ்ச்சி பாதியில் நின்றதுடன், சித்தார்த்தும் வெளியேறினார். இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
#Shivanna Apologies for yesterday's incident happened to Siddharth during #Chithha Karnataka Press meet🤝
— AmuthaBharathi (@CinemaWithAB) September 29, 2023
This Man👏♥️ pic.twitter.com/4DaYpqgp6l
இந்த நிலையில், சித்தா பட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சம்பவத்திற்காக, பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்பு தெரிவித்துள்ளார். பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், சித்தார்த் மற்றும் சித்தா படக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இவர், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.