சித்தார்த்தின் ’மிஸ் யூ’ பட டீசர் வெளியானது...!
நடிகர் சித்தார்த் நடித்த ’மிஸ் யூ’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படமான ’மிஸ் யூ’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ராஜ்சேகர் என்பவர் இயக்கியுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ஜீவா நடித்த ’களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த் நாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தின் டீசரில் ரொமான்ஸ் மட்டும் காமெடி காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் கருணாகரன், பாலசரவணன், லொள்ளு சபா, மாறன் உள்பட பலர் நடித்துள்ள நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.