சந்தோஷ் நாராயணன் இசைக்கச்சேரியில் சித்தார்த் குரல்

சந்தோஷ் நாராயணன் இசைக்கச்சேரியில் சித்தார்த் குரல்

2012ல் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். அதன்பிறகு பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறைவி, இறுதிச்சுற்று, கொடி, கபாளி, காலா, மேயாத மான், பரியேறும் பெருமாள், வட சென்னை, ஜிப்ஸி என  இவர் இசையமைத்த அனைத்துப் படங்களிலுமே பாடல்கள் பயங்கர ஹிட்.  முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.


இந்நிலையில், இலங்கையில் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டு சித்தா படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அசத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 

Share this story