2வது முறையாக திருமணம் செய்துகொண்ட சித்தார்த், அதிதி ; புகைப்படங்கள் வைரல்!

siddarth

நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் இருவரும் ராஜஸ்தான் பாரம்பரிய முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சித்தார்த்தும், அதிதி ராவும் கடந்த 2021 ஆம் ஆண்டு 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் தெலுங்கானாவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களது நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் எளிமையான திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து சித்தார்த், அதிதி ராஜஸ்தான் பாரம்பரிய முறைப்படி பிசான்கார் (bishangarh) பகுதியில் உள்ள அரண்மனையில் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டனர்.


இந்த புகைப்படங்களை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். இந்த பாரம்பரிய திருமணத்தில் அதிதி ராவ் சிவப்பு நிற லெகங்கா உடையில் பல்வேறு நகைகளை அணிந்துள்ளார். அதேபோல் நடிகர் சித்தார்த் வெள்ளை நிற ஷெர்வானி உடையில் முத்து மாலை அணிந்து கம்பீரமாக உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் நடிப்பில் கடைசியாக ’இந்தியன் 2’ வெளியான நிலையில், ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' திரைப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அதிதி ராவ் நடித்த ’ஹீராமந்தி’ வெப் சீரியஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அதிதி ராவ் தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Share this story