பாதியில் நின்ற நடிகர் சித்தார்த்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – என்ன காரணம் தெரியுமா?

photo

 நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள  ‘சித்தா’ படம் நேற்று வெளியானது. இந்த படம் கன்னடத்தில் ‘சிக்கு’ என்ற பெயரில் வெளியானது. அதற்காக  பெங்களூருவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக் கொண்டிருக்கையில் காவிரி பிரச்சைனையை முன்னிறுத்தி கன்னட ஆதரவாளர்கள் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தினர்.


அதாவது காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. நாளைய தினம் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தின் பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடப்பதை அறிந்த கன்னட ஆதரவாளர்கள் படத்திற்கும், சித்தார்த்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தினர். இதனால் அந்த சந்திப்பு பாதியில் நிறுத்தப்பட்டு சித்தார்த் வெளியேறினார்.

  

Share this story