‘சித்தா’ படத்தை பாராட்டிய மணிரத்னம், கமல்- சித்தார்த் பெருமிதம்.

photo

நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்துள்ள படம் சித்தா, இந்தப்படத்தை ‘சேதுபதி’ பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார் படம் எமோஷனல் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.  படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்,படத்தின் பெரும்பாலான காட்சிகள் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

photo

 ‘சித்தா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவுற்று தற்போது ப்ரோமோஷன் வேலை நடைபெற்றுவரும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சித்தார்த் “எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை படமாக்கிய உணர்வை சித்தா அளித்துள்ளது மக்களின் உண்மையான வாழ்க்கையை அப்படியே படமாக்கியுள்ளோம் ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம் காவல்நிலையம், சமூகம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் எனது குரு மணிரத்தினம் மற்றும் கமல் ஆகியோரிடம் படத்தை காண்பித்தேன் மிகவும் பாராட்டினார்கள்” என கூறினார் சித்தார்த்.

Share this story