'டீசல்' பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன்

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் முதல் பாடல் ’பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது. டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#STRforDiesel
— Harish Kalyan (@iamharishkalyan) February 16, 2025
Ennoda kaadhuku idhu paata irundhalum, en nenjukku anbu dhan kekkudhu.
@SilambarasanTR_ kuralil #DillubaruAaja from #Diesel
Thanks for doing this. Love you na ❤️🤗
Song releasing on Feb 18th. Check out the promo ⬇️
@AthulyaOfficial @devarajulu29… pic.twitter.com/zxcPdd1rds
இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியீட்டை ஒட்டி படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது. தற்போது டீசல் படத்தின் இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.