மீண்டும் படமாகும் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’வின் வாழ்க்கை வரலாறு.

photo

கோடான கோடி ரசிகர்களை  கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

கடந்த 2011 ஆண்டு நடிகை வித்யாபாலன் நடிப்பில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘The Dirty Picture’ என்ற தலைப்பில் படமானது படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் சில்க்கின் வாழ்க்கை மீண்டும் படமாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் பிரபல மாடல் அழகியான சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேயாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

Share this story