சிம்புவின் ‘காட்டுப்பசிக்கு’ விருந்து’ - கமலின் தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு !

str48

 கமலின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு புதிய படங்களை தயாரிக்க உலகநாயகன் கமல் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதியை வைத்து இரு படங்களை தயாரிக்க முடிவு செய்தார். தற்போது சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதேநேரம் உதயநிதி அமைச்சராகிவிட்டதால் படத்திலிருந்து விலகிவிட்டார். 

str48

அதனால் உதயநிதி நடிக்கவிருந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார். 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. BLOO Dand BATTLE என தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி தேசிங்கு பெரியசாமி இருக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

str48

இதற்கிடையே கடந்த 1978-ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் இருக்கலாம் என கூறப்படுகிறது.  ‘பத்து தல’ படத்தை முழுவதுமாக முடித்துள்ள சிம்பு, சமீபத்தில் அளித்த பேட்டியில் காட்டுப் பசியில இருப்பதாகவும், ‘மன்மதன்’ படத்தை போன்று படத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார். சிம்பு கூறிய விஷயங்களை வைத்து பார்க்கும் போது நிச்சயம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டாம் பாகமாக இப்படம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 


 

Share this story