இறுதிக்கட்டத்தை எட்டிய ‘பத்து தல’... சிம்பு படத்தின் முக்கிய அப்டேட்

pathu thala

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். 

pathu thala

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு இரண்டு வாரங்களில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story