ரெட்டை வேடத்தில் நடிக்கும் சிம்பு -எந்த இயக்குனரின் படத்தில் தெரியுமா ?

நடிகர் சிம்பு தற்போது வெளியான தக் லைஃப் படத்தில் ஒரு சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார் .அவர் பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் .அவை மன்மதன், சிலம்பாட்டம், அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்கள் ஆகும் .இந்நிலையில் அவர் தன்னுடைய 49 வது படத்திற்க்கு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .இந்த படத்தை தமிழ் சினிமாவில் தோல்வி படமே எடுக்காத வெற்றி பட இயக்குனர் வெற்றி மாறன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது .வெற்றி மாறன் இதற்கு முன்னர் பொல்லாதவன் ,ஆடுகளம் ,விடுதலை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர் .இவருடன் சிம்பு சேர்ந்து நடிப்பது இது முதன் முறையாகும் .
தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான ஹீரோக்கள், இரட்டை வேடங்களில் நடித்திருக்கின்றனர். அதற்கு சிலம்பரசனும் விதிவிலக்கல்ல. தற்போது தனது 49வது படத்திலும் அப்படி ஒரு தோற்றத்தில் அவர் வர இருக்கிறாராம். ஒரு தோற்றம் இளமையாகவும், ஒரு தோற்றம் முதுமையாகவும் இருக்கப்போவதாக கூறப்படுகிறது. அதற்கான டெஸ்ட் ஷூட்டும் சமீபத்தில் நடந்ததாம். 2 வாரங்களுக்கு முன்பு நடந்தது, சாதாரன லுக்கின் டெஸ்ட் ஷூட் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.