#Thuglife அதகளப்படுத்தும் சிம்பு.. தக் லைஃப் மாஸ் வீடியோ !!!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் கமலஹாசன். இயக்குனர் மணிரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். திரிஷா, அபிராமி, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான ஒரு படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.
இது ஒரு மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிலிருந்து கமலஹாசன் உடன் இணைந்து நடிகர் சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடித்து வரும் காட்சியின் புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழுவானது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரத்யேக போஸ்டரையும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன் கமல் ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. சிலம்பரசனின் மாஸ் லுக் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.