வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகும் ஹீரோ யார் தெரியுமா ?

நடிகர் சிம்பு சிறு வயது முதற்கொண்டே சினிமாவில் நடித்து வருகிறார் .இவர் நடித்த பல படங்கள் தமிழில் ஹிட்டடித்துள்ளன .குறிப்பாக மன்மதன் ,கோவில் ,என்று அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும் .இவர் நடிக்க மணி ரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் தக் லைப் என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றுள்ளது .
இந்நிலையில் நடிகர் சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படமும் , தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் என அடுத்தடுத்து நடித்து கொண்டிருக்கிறார் .
இந்நிலையில் தமிழ் திரையுலகின் வெற்றிகரமான இயக்குனர் வெற்றி மாறன் ஆவார் .இவர் இயக்கத்தில் பொல்லாதவன் ,ஆடுகளம் ,விடுதலை என்று பல வெற்றி படங்கள் வந்துள்ளன .அடுத்து நடிகர் சிம்பு வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் செய்திகள் கூறுகின்றன .இது வித்தியாசமான கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்படுகிறது .இது வெற்றிமாறனின் வடசென்னை பாணியில் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது .